2015ல் ஜனவரி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க இலங்கை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வியாழக் கிழமை காலை மக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு ஓர் இரு தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த முடிவு குறித்து உறுதியளித்ததன் பின்பே புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த முடிவுக்கு பின்னணியில் பல சம்பவங்களும் ,கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெற்றுள்ளமை குறித்து தற்போது எமது இணையத்தளத்திற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இனி இந்த பின்னணியைப் பற்றி பார்ப்போம்...
2007ம் ஆண்டு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சராக இருந்த போது – அப்போது ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேறியதை வாசகர்கள் அறிந்ததே.
இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவ்வாறான ஒரு சம்பவம் இதன் பிறகு நடைபெறக் கூடாது என திட்டமிட்டு செய்யப்பட்டதன் வெளிப்பாடு தான் தற்போது மு.கா தலைவர் ஹக்கீமால் எடுக்கப்பட்ட இவ் முடிவாகும்.
இதற்கமைய , முகா தலைவர் ரவூப் ஹக்கீமுடைய விருப்பு வெறுப்புக்களை அறிந்து (கெமஸ்ரி) அதன் படி செயற்படுவதற்காக ஜனாதிபதியின் மிகவும் நெருக்கமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவத்ரணவை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் நியமித்து ஹக்கீமுடன் நெருக்கமாக பழகும் அனுமதியை வழங்கியிருந்தார் ; ஜனாதிபதி.
இந்த வேவைளயில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ரவூப் ஹக்கீம் தனித்து போட்டியிட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதை தவிப்தற்கு ஹக்கீமுடன் சஜின்வாசின் உறவு அரசுக்கு பாலமாக அமைந்ததுடன் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும் சஜினின் உறவு கால்கோளாக அமைந்தது.
இந்த இருவருட ஹக்கீம் – சஜின் வாஸ் உறவில் – சஜினும் ஹக்கீமும் இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் சென்று மிக்க நண்பர்களாக பழகிக் கொள்ளும் நட்பு இருவருக்குமிடையில் ஏற்பட்டுக் கொண்டது.
இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு முற்று முழுதாக சாதகமாக மாறியது.
இவ்வாறான நிலையில் ஹக்கீமினதும் மு.கா கட்சியினதும் தேவைப்பாடுகள் சம்பந்தமாக நன்கு விளங்கிக் கொண்ட சஜின்வாஸ் குணவத்ரண அது தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி அவற்றை நிறைவேற்றிக் கொடுத்ததுடன் மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
இது ஒரு புறம் இருக்கத்தக்கதாக – இதற்கு சமாந்தரமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கும் முடிவை கட்சிக்குள் திரட்ட இன்னொருவரை மறைமுகமாக நியமித்தது அரசு.
அவர் வேறு யாரும் அல்ல தற்போதைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஷீர் அகமட் ஆகும்.
மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் ஹக்கீமின் முடிவு மாற்றமடையாமல் அதனை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுப்பதற்காகவே ஹாபீஸை நியமித்தது அரசு.
இந்த வேளை கட்சிக்கு வெளியில் இருந்த ஹாபிஸை கட்சிக்குள் அனுப்பி ஹக்கீமுக்கு நெருக்கமானவராக ஆக்கியதுடன் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்படுவதற்கும், கிழக்கு மாகாணத்தில் அமைச்சுப் பதவியை ஹக்கீமுக்கு ஊடாக ஹாபீஸ் பெறுவதற்கும் ,பின்னணியில் அரசு தான் இருந்தது.
இது இவ்வளவும் ஹாபீஸ் நஷீர் மீண்டும் கட்சிக்குள் இணைந்த ஒரு மாதத்துக்குள் நடந்து முடிந்தவையாகும்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹாபீஸ் நஷீர் ஒரு கல்லில் இரு மாங்காயை பறிப்பதற்கு முடிவெடுத்தார்.
அதாவது , அரசுக்கு ஊடாக வர்த்தக வாய்ப்புக்களை மேற்கொள்வதற்கு அரசிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கும் , முகா தலைவர் ஹக்கீம் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் சிலருக்கு மாதாந்த அடிப்படையில் (Pay Roll) வேதனத்தை வழங்குதற்குமான அனுமதியை மேற்படி வர்த்தக வாய்ப்பிலிருந்து கிடைக்கும் இலாப பணத்தின் ஊடாக செலுத்துவதற்குமான அனுமதியை பெறுவதற்குமான அழுத்தத்தை அரசுக்கு கொடுத்தார் ஹாபீஸ்.
இதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு ஹாபீஸ் தலைமையிலான நிறுவனம் ஒன்றையும் – சவுதி கம்பனி ஒன்றையும் கூட்டிணைத்து காலி துறைமுகத்தில் கப்பல் தயாரிக்கும் பாரிய தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அளித்தது.
இந்த அனுமதியை பெற்றுக் கொடுத்ததற்காக சவூதி நிறுவனம் தரகுப்பணமாக ஹாபீஸூக்கு ஒரு தொகையை வழங்கியது.
அத்துடன் இக்காலப்பகுதியில் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை ஏற்பட்டதனால் சவூதியிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை அரசு அண்மையில் கைச்சாத்திட்டது. இதற்கு உறுதுணையாக இருந்தவர் ஹாபீஸ். இதற்காக குறித்த சவூதி எண்ணெய் நிறுவனம் ஹாபீஸூக்காக ஒரு தொகைப் பணம் வழங்கியது.
இவ்வாறான வியாபார ஒப்பந்தங்களை ஹாபீஸூக்கு அரசு செய்து கொடுத்ததன் நோக்கம் மு.காவை தொடர்ந்தும் அரசோடு வைத்துக் கொள்வதற்காகும்.
தனக்கு கிடைக்கப்பெற்ற தரகுப்பணத்தில் சிறியளவான தொகையை ‘கட்சியின் வளர்ச்சி நிதி’க்காக என்ற போர்வையில் ஹக்கீமுக்கு வழங்கியிருந்த ஹாபீஸ் இன்னுமொரு தொகையை முன்னர் குறிப்பட்டது போல உயர்பீட உறுப்பினர்களுக்கும் மாதாந்த அடிப்படையில் வேதனமாகவும் வழங்கி, ஹக்கீமுக்கு விசுவாசத்தைகாட்டிக் கொண்ட அதேவேளை, உயர் பீட உறுப்பினர்கள் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற தோற்றப்பாட்டின் மூலம் அரசையும் நம்பவைத்தார்.
இந்த நேரத்தில் தான் தமிழ் திரைப்படங்களில் வருகின்ற கிளைமேக்ஸ் காட்சிகளைப் போன்ற கட்டம் வருகின்றது. அதாவது – ஜனாதிபதியை ஆதரிக்கும் முகாவின் முடிவு என்பதாகும்.
மிக முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும்
முகாவின் உயர்பீட உறுப்பினர்கள் , கட்சிச் செயலாளர் நாயகம் , எம்பி க்கள்,மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவருக்குமே தெரியப்படுத்தப்படாமல் மு.கா தலைவர் ஹக்கீமும் ஹாபீஸூம் தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் இது. அதன்பிற்பாடு அதனை ஜனாதிபதி மகிந்தவிடம் உறுதியாக அறிவித்து விட்டதன் பின்பே இவர்கள் இருவரும் மக்கா புறப்பட்டு சென்றுள்ளனர் என்பது மர்ம இரகசியமாகும்.
இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும், கடந்த காலங்களில் ஹக்கீம் இவ்வாறான முடிவுகளை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர் தன்னிச்சையாக ஏற்கனவே முடிவெடுத்து விட்டு மக்காவுக்கு சென்று உம்ராக் கடமையை நிறைவேற்றி விட்டு, நாடு திரும்பி, அதனை மக்களுக்கு, ஏற்கனவே எடுத்த முடிவை அறிவிப்பதை ஒரு வழமையாக கொண்டுள்ளார்.
அவ்வாறான மக்கா விஜயமாகவே இந்த விஜயமும் அமைந்துள்ளது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் ஹாபீஸ் நஷீரும் இன்று அல்லது நாளை நாடு திரும்பியவுடன் அடுத்து வரும் மூன்று தினங்களில், ஒன்றுக்கு மூன்று தடைவை பெயரளவிற்காக உயர்பீடம் கூட்டப்பட்டு, அங்கு திட்டமிட்ட அடிப்படையில் ஜனாதிபதி ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற பிரதி வாதங்களும் இடம்பெறும்.
ஆங்கு கூச்சல் குளப்பம் ஏற்பட்டதாக ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு காட்டப்படும். இறுதியில் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பு ஹக்கீமுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, அவர் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருக்கும் முடிவான ஜனாதிபதிக்குத் தான் ஆதரவு என்ற முடிவை அறிவிப்பார்.
இது தான் முகா ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவின் பின்னணியாகும்.
இது இவ்வாறிருக்க ஹக்கீமின் முடிவை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய ஜனாதிபதி தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலமாக ஹக்கீமுடன் உரையாட வைத்து ஹக்கீமின் முடிவை அவர்கள் மூலமாக அறிந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் தனக்கு நெருக்கமான அமைச்சர்களுடன் கருத்து வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, முகா 100 வீதம் எனக்கே ஆதரவளிக்கும். அத்துடன் நிபந்தனை இன்றி ஆதரவளிக்க உறுதியளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் திகதி குறிப்பிடும் தினத்தன்று தனக்கான நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் முடிவை ஊடகவியலாளர் மாநாட்டின் மூலமாக ஹக்கீம் அறிவிப்பார் என்றும் தனக்கு நெருக்கமானர்வகளுடன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Thanks To : srilankamuslims.lk