GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா பகுதியில் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிரி தெரிவிக்கின்றார். இதனால் போக்குவரத்துக்கு இடைய10று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கலை ப10ங்கா வரையும் நுவரெலியா நகரிலும் நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் நானுஓயா வரையும் நுவரெலியா கண்டி பிரதான வீதியில் ரம்பொடை வரையும் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகின்றதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
இதனால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது முன் விளக்கை போட்டுக்கொண்டு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.







 
Top