GuidePedia


தனியார் பஸ் ஒன்றில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் இன்று காலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற குறித்த பஸ்ஸில் இருந்து, 1000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 104 அடங்கிய பொதி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உரிமையாளர் இன்றிக் கிடந்த அந்தப் பொதியை பஸ்ஸின் கண்டெக்டர் காலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



 
Top