GuidePedia

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பினை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பு பற்றிய புரிதல் இன்றி அரசாங்கம் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டங்கள் மற்றும் சில தேவைகளுக்காக ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களை சந்தித்தன் பின்னரே இவ்வாறு புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதான சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு பற்றிய புரிதல் இல்லாத அமைச்சர்கள் பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்கள் அமைச்சர்களாக கடயைமாற்ற தகுதியற்றவர்கள் என அவர் தெரித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக ஏன் அரசாங்க சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை என்பதனை விமல் வீரவன்சவின் தலைவரிடம், வீரவன்ச கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றம் சுமத்துவதனை விடுத்து தங்களது கடமைகளை அமைச்சர்கள் உரிய முறையில் செய்தாலே நாட்டை காப்பாற்றிவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்தமாதனுக்கு அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



 
Top