(க.கிஷாந்தன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற திவிநெகும வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் 6ஆம் கட்டத்தையொட்டிய நிகழ்வுக்கு அமைவாக மலையகத்தில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதான வைபவம் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலையில் 20.10.2014 அன்று நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது காய்கறி விதைகள், கன்றுகள், பழக்கன்றுகள், விதைகள் மற்றும் பயிர் வகைள் கிராமிய, தோட்ட மக்களிடையே அமைச்சரினால் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு சாணஅருன எனும் கடன் திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் சமூர்த்தி அங்கத்தவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.