2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் ஹோட்டலில் நடைபெற விருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விருது பெறவுள்ள இவர், ப்ரபோதய சஞ்சிகை, திவயின பத்திரிகை ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தப்ரபேனிகா (Taprobanica) ஆய்வுச் சஞ்சிகையின் உதவி ஆசிரியரான இவர், ஏற்கனவே 2002, 2004, 2005, 2007, 2009, 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த விஞ்ஞான ஆய்வுகளுக்கான விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் 103 A, நாவின்ன வீதி, காலியைச் சேர்ந்த ஏ.டப்ளியு.எம். முஜ்தபா– எம்.எச். பாத்திமா தம்பதியிரின் புதல்வராவார்.