GuidePedia

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, களு, கிங் மற்றும் நில்வளா ஆகிய கங்கைகள் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக தாழ் நிலை பகுதிகள் சில நீரில் மூழ்கியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலி, குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 200க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக, தெதுரு ஒயா நீர் தேக்கத்தின் 8 அவசர கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் களுத்துறை, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அச்சுறுத்தல் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



 
Top