(நஹீம் முஹம்மட் புஹாரி)
மூதூர் கிழக்கு சம்பூர் கடற்படை முகாமில் கடற்படை பயிற்சி பெற்று வந்த 22 வயதான ஜீ.டபல்யூ.சீ. சந்தருவன் நேற்று வெள்ளிக் கிழமை பி.ப 5.30 மணியளவில் சம்பூர் கடலில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிர் இழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்படை சிப்பாயின் சடலம் நேற்று மாலை மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டதோடு இச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மூதூர் திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூறுல்லா சடலத்தை பிரேத பரிசோதணைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.