(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு புலமைப்பரிசில் எழுதி இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இது ஒரு பின்தங்கிய பாடசாலையாகும். அவ்வாறு சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களினால் கற்பித்த ஆசிரியைகளையும்ää ஏனைய ஆசிரியர்களையும் கௌரவித்தமையோடு ஆசிரிய தின நிகழ்வுகளும் கொண்டாடப்பட்டது.
காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலய அதிபர் ஏ.எம்.முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயத்தின் அதிபர் எம்.கலாவுதீன் கலந்து விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வியினால் “இன்று ஆசிரியர் வகிபாகம்” எனும் தலைப்பின் கீழ் உரையாற்றினார்.