(துறையூர்ஏ.கே மிஸ்பாஹுல்ஹக்)
சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாத
நிகழ்வுகளை இம்மாதம் ஒக்டோபர் 24, 25, 26 ம் திகதிகளில் அமீர் அலி பொது
நூலகத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் பிரதானமாக e-
Paper Section திறப்பு விழாவும், விவாதப் போட்டி, அறிவுக் களஞ்சியம், சித்திரப்
போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் சிறுவர்களுக்கான கழியாட்ட நிகழ்வுகள், திரைப்படக் காட்சி,
சித்திரக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, நூல் கண்காட்சியும் விற்பனையும் போன்ற
நிகழ்வுகள்இடம்பெறவிருக்கின்றன.
இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ்
A.M.M நௌஷாட்தலைமைல்நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் M.Y சலீம்அவர்களும்மற்றும்கௌரவ
அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் பொது மக்களாகிய உங்கள்அனைவரையும் கலந்து சிறப்பிக்க, அமீர்
அலி பொது நூலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உங்களை அன்புடம்
வரவேற்கின்றது.