(துறையூர் ஏ.கே
மிஸ்பாஹுல் ஹக்)
பொது பல சேனா
அமைப்பானது முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு குரோத செயற்பாடுகளை முன்னெடுத்து
வருவது யாவரும் அறிந்ததே.எம்மில் கை வைத்தாலும் அமைதி காத்து விடலாம்.எதில் கை
வைக்க முஸ்லிம்களாகிய நாம் விடக் கூடாதோ அந்தக் குர்ஆனில் இல்லாத பலவற்றை
இருப்பதாக கூறி அன்னியர்களிடத்தில் குர்ஆன் பற்றிய தப்பபிப்பிராயத்தை இன்று பொது
பல சேனா அமைப்பு விதைத்துள்ளது மாத்திரமின்றி இது பற்றி முஸ்லிம்களிடத்தில்
விவாதிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தது.
இன்று
அன்னியர்களிடத்தில் குர்ஆன் பற்றி எடுத்துரைத்தாலே குர்ஆனில் தகிய்யா என்ற
அத்தியாயம் உள்ளதாமே?அது அந்நியர்களுக்கு
எதிரானதாமே?
முஸ்லிம்களை மற்றவர்களின் காணிகளை
அபகரிக்க தூண்டுகிறதாமே?அது அப்படி சொல்லுதாமே?இப்படிச்
சொல்லுதாமே?என எம்மிடம்
கேட்கும் அளவு செல்வாக்குச் செலுத்துவதை யாரும் மறுக்க இயலாது.
இது பற்றிய
தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிகளாகிய எம் ஒவ்வொருவருக்கும்
உண்டு.ஆனால்,இவ் விடயத்தில்
எமது காய் நகர்த்தலை நாம் மிகவும் கட்சிதமாக அமைக்க வேண்டும் என்பதையும் நாம் கருத்திற்
கொள்ள வேண்டும்.
பொது பல சேனாவின்
குர்ஆன் பற்றிய அவதூறைத் தொடர்ந்து
கொம்பனித்தெருவைச் சேர்ந்த நூர்தீன் முஹம்மட் தாஜுதீன் உட்பட 13 பேர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு
செய்திருந்தனர். இது பற்றி போலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த போதும் அம்
முறைப்பாடுகளுக்கு என்ன நடந்தது?என்பது கேள்வி
அடையாளத்துடனே இற்றை வரை உள்ளது.
இது பற்றி
முஸ்லிம்களிடத்தில் விவாதிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக பொது பல சேனா அமைப்பு
கூறியதைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் SLTJ அமைப்பும் பொது பல சேனாவிற்கு விவாத அழைப்பு விடுத்திருந்தது.எனினும்,"முஸ்லிம்களில் திமிங்கிலங்கள் இருந்தால்
சொல்லுங்கள் விவாதம் செய்ய வருகிறோம். நெத்தோலிகளிடம் விவாதம் செய்ய தயாரில்லை” எனக் கூறி முஸ்லிம்களினது விவாத அழைப்பை
நிராகரித்தது.
"அவன் பாட்டுக்கு அவன் கத்தட்டும் நாம் அவனுடன்
விவாதிக்க தேவை இல்லை"என முஸ்லிம்கள் பலரும் விவாதத்திற்கு தயார் எனக்
கூறியவர்களை வைதனர்.அப்படியானால் எமக்கு குர்ஆன் மீதுள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க
வேண்டிய கடப்பாடு இல்லையா? பகிரங்க
விவாதத்திற்கு பொது பல சேனா அழைப்பு விடுத்தமையே பொது சேனாவின் கருத்து அந்நிய
மக்களிடம் ஒரு படி முன்னேற காரணமாகும்.போன்றவற்றை எமது சமூகம் சற்றே நினைவிட் கொள்ள வேண்டும்.
எனினும்,பொது பல சேனா அமைப்பு தற்போது ACJU இன் கீழ் விவாதம் செய்ய தயார் எனக்
கூறியுள்ளது.இதற்கு எது விதமான பதிலையும் ACJU
வழங்கியதாக தெரியவில்லை.வழங்குமா?என்பதும் சந்தேகமே.ஆனால்,SLTJ ஆனது ACJU இன் கீழ் விவாதிக்க தயார் எனக்
கூறியுள்ளது.விவாதத்தை பொறுத்த மட்டில் ACJU வை விட SLTJ
இற்கே அதீத பொருத்தமாக
இருக்கும்.
நாம் விவாதத்திற்கு
செல்ல மறுப்புத் தெரிவிக்கும் போது அல்லது மௌனம் காக்கும் போது அவர்கள் கூறியது
சரி என்பதனால் விவாதத்திற்கு முஸ்லிம்கள் மறுக்கிறார்கள் என தனது செயல்களுக்கு
பொது பல சேனா நியாயம் கற்பிக்க விளையலாம்.
இன்னுமொரு புறம்
பார்த்தால் sltj இற்கும் bbs இற்கும்
கொஞ்சமும் பொருந்தாது,அப்படி இருக்க நாமே அவர்களை மூட்டி விடலாமா??
எனவே,ACJU
ஆனது SLTJ இன் கீழ் முற்று முழுதாக விவாதத்தை செய்ய
விளையாது sltj யையும்
விவாதத்தில் பங்கு கொள்ளச் செய்து விவாதம் செய்ய தயார் என பொது பல செனாவிற்கு
பதில் வழங்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக அமையும்.
எது எவ்வாறு
இருப்பினும் ஒரு போதும் பொது பல சேனா அமைப்பினால் குர்ஆன் மீதான தனது கருத்துக்களை
ஒரு போதும் நிரூபிக்க இயலாது.இது பொது பல சேனா அமைப்பிற்கும் நன்கே தெரியும்.எனவே,விவாதத்திற்கு வந்து நையப்புடைந்து மக்களிடம்
செல்லாக் காசாய் மாற பொது பல சேனா ஒரு போதும் விரும்பாது.அதனால் இவ் விவாதத்தை எவ்
வழி கொண்டாவது நிறுத்த முயற்சிக்கும் மாறாக
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளும் போது அதில் உள் நோக்கம் பல நிறைந்து காணப்படும், அப்படி,பொது பல சேனா
ஒப்புக் கொண்டாலும் ஏதாவது ஒரு வழி வழியில் அரசே தடுக்க முயலும்.எனவே,இங்கே விவாதத்தை விட மக்களிடம் செல்லப்போகும் கருத்து ரீதியான
உளவியல் தாக்கமே பெரும் செல்வாக்குச் செலுத்தப் போகிறது.
குர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப்
பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம்
மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.