GuidePedia

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று காலை காயங்களுடன் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர் கிரான்குளத்தினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை அருளானந்தம் (53வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் காத்தான்குடியில் கூலி வேலை செய்து வந்ததாகவும், அதிகாலை வேலைக்கு சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் விபத்தில் உயிரிழந்துள்ளாரா? அடிகாயங்களினால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



 
Top