(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் இருந்து பசு மாடு மூன்றை இறைச்சிக்காக அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை லொறி ஒன்றில் கொண்டு செல்லும் போது நோர்வூட் பகுதியில் வைத்து 19.10.2014 அன்று காலை நோர்வூட் பொலிஸாரால் குறித்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தும் போது அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டை கொண்டு செல்வதாக தெரியவந்துள்ளது.
இதன் பின் மாட்டை கொண்டு சென்ற 3 சந்தேக நபர்களையும் லொறியையும் கைது செய்துள்ளனர்.
குறித்த லொறியில் இடையூறு விளைவிக்கும் வகையில் 3 பசு மாடுகளையும் கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு பசு மாடுகளை பிரதான வீதியில் கொண்டு செல்லாமல் தோட்ட குறுக்கு வழியாக கொண்டு செல்ல முற்பட்டதாகவும், கால்நடை வைத்தியரின் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கொண்டு சென்றதாகவும் தொடர்ச்சியாக பால் கரந்து கொண்டிருக்கும் பசு மாடுகளையே இவ்வாறு கொண்டு சென்றதாக இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாடுகளின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
கைது செய்த லொறியையும் சந்தேக நபர்கள் 3 பேரையும் 19.10.2014 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தயிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.