(க.கிஷாந்தன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் அடிப்படையின் கீழ் பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு கிலோ மீற்றர் கொண்ட அட்டன் டன்பார் வழியாக அட்டன் கொழும்பு பழைய வீதிக்கு மற்றும் எபோட்சிலி தோட்டம் உட்பட பல தோட்டங்களுக்கு செல்லும் டன்பார் வீதியை காப்பட் செய்யும் நடவடிக்கை 17.10.2014 அன்று தாவரவியல், ப10ங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அழகமுத்து நந்தகுமார் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.