GuidePedia

ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜாமீன் உத்தரவு நகல் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து ரூ.2 கோடி மதிப்பிலான பிணை பத்திரத்தை ஜெயலலிதா தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவரை சிறையில் இருந்து விடுவிக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நகலையும், ஜாமீன் உத்தரவாதத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் வழங்கி ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பெற வேண்டும்.
இதில், உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்து அதை கர்நாடக நீதிமன்றத்தில் அளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 4 பேரும் தலா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிணை பத்திரம் தாக்கல் செய்தனர்.  இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த ஆணை சிறைத்துறை அதிகாரியிடம் வழங்க வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர். அதன்பிறகு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்புகிறார்.
ஜெயலலிதா இன்று விடுதலையாவதையொட்டி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் பெங்களூரு சிறை அருகில் ஜெயலலிதாவை வரவேற்க மகிழ்ச்சியுடன் முகாமிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவை வரவேற்க தொண்டர்கள் திரண்டனர்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையில் இருந்து இன்று பிற்பகல் விடுதலை ஆகிறார்.
அவரை வரவேற்க முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, மோகன், வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, செந்தில்பாலாஜி, எம்.சி. சம்பத், செல்லூர் ராஜூ, செந்தூர்பாண்டியன், முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி. உதயகுமார், பி.வி.ரமணா, ஜெயபால், அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர், சுப்பிரமணியன், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சிறை வாசலில் கூடி இருந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜி.செந்தமிழன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா மனோகரன், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், மாநகராட்சி சுகாதார நிலைக் குழு தலைவர் வக்கீல் பழனி, எம்.பி.க்கள் திருத்தணி அரி, அருண் மொழிதேவன், குமார், சந்திரகாசு, வேணுகோபால், அன்வர்ராஜா உள்ளிட்ட அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் சிறைவாசலில் திரண்டு இருந்தனர்.
வழிநெடுக அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பெங்களூர் விமான நிலையம் வரை திரண்டு இருந்தனர். சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஜெயலலிதாவுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்காக அமைச்சர் டி.எம்.கே.சின்னையா, பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் ராமராஜன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.கந்தன், வி.என்.பி. வெங்கட்ராமன், தன்சிங், நகரசபை தலைவர்கள் தாம்பரம் கரிகாலன், செம்பாக்கம் சாந்தகுமார், நிசார்அகமது, நசீர், முன்னாள் காஞ்சி கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மண்டலக்குழு தலைவர்கள் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், கொட்டி வாக்கம், ராஜாராம், கவுன்சிலர்கள் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, பி.ஏ. ஜெயச்சந்திரன், ஜே.கே.மணிகண்டன் அலிகான்பஷீர், அமுதா வெங்கடேசன், எம்.எஸ்.பாஸ்கர், மேட வாக்கம் காளிதாஸ், ஒட்டியம் பாக்கம் லோகிதாஸ், துணைத் தலைவர் எம்.வீரபாபு, கானத்தூர் முகில்வண்ணன், பனையூர் முஸ்தபா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்ததால் கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை வழிநெடுக தொண்டர்களும், மகளிரணியினரும், மனிதசங்கிலி போல் ரோட்டில் நின்று இருந்தனர்.
போயஸ் கார்டனுக்கு செல்லும் பின்னிரோடு சந்திப்பில் ஆயிரம் விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ், தொழிற்சங்க செயலாளர் அர்ஜுனன், கவுன்சிலர் நுங்கை மாறன், உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.
போயஸ் கார்டன் வாசலில் நடிகர் குண்டு கல்யாணம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் வரவேற்பு அளிக்க திரண்டு இருந்தனர்.
ஆபத்தான நிபந்தனைகளுடனான பிணை! அம்மாவை மீண்டும் சிறையில் தள்ளுமா?
இன்று இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கு விசாரணையில் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நாளை ஜெயலலிதா பிணையில் வீடு திரும்பவுள்ளார்.
இது குறித்து மேலதிகமான தகவல்களை ஆராய்வதற்காக லங்காசிறி எப்.எம். கனடாவிலுள்ள ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்களை வானலையில் இணைத்த போது, மருத்துவ காரணங்களிற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணையில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அவரை ஒரு சிறகு வெட்டப்பட்டு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பறவை போல ஆக்கியுள்ளது.
டிசம்பர் 18ம் திகதிக்கு முன்பதாக ஜெயலலிதா தரப்பு மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். அது சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் விசாரணைகள் முடிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் ஆபத்தான ஒரு நிபந்தனை.
ஏனென்றால் இவ்வாறான மனு வழக்குகளின் போது காலத்தை இழுத்தடிப்பதன் மூலமாகவே சிறைக்குச் செல்வதை அல்லது தண்டனை பெறும் காலத்தை தவிர்ப்பது வழமை. ஆனால் அது ஜெயலலிதாவால் முடியாது என்பது உள்ளிட்ட பல பிரத்தியேகத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.




 
Top