ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்ச மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம், உயர் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18ஆவது திருத்தத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி காரியாலயத்தின் ஊடாக நீதிமன்றிடம் நவம்பர் முதல் வாரத்தில் கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பித்ததன் பின்னர், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தில் இருக்கின்ற உறுப்புரைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடமுடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உள்ளிட்ட சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தெரியவருகின்றது. -