(க.கிஷாந்தன்)
இன்று மலையக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. இந்த பிரச்சினைகளை ஒவ்வொன்றாகதான் தீர்க்க முடியும் எனவும் அவற்றில் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணிப் பிரச்சினை பிரதானமாக காணப்படுகின்றது.
இந்த லயத்து வாழ்க்கையை மாற்றி தனி வீடுகள் அமைக்க வேண்டும் என தாவரவியல்ää ப10ங்கா மற்றும் பொழுதுபோக்கு பிரதி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன்; 17.10.2014 அன்று அட்டன் டன்பார் வீதியை புனரமைக்கும் வேலை ஆரம்பிக்கும் போது அங்கு நடைபெற்ற கூடத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்……
மலையக மக்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள தலா 7 பேர்ச் காணி வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
மலையக மக்களின் காணி கோரிக்கையை வலியுறுத்த வேண்டியது மலையக அரசியல் அமைப்புகளின் ஒரு கடமையாகும். மலையக அரசியல் ரீதியில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்ää கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினையை வலியுறுத்திää அதற்கு தீர்வு பெற்று கொடுக்க எல்லோரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
தோட்ட தொழிலாளிகளின் உழைப்பின் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்ற தொழிலாளர்களுக்கு வீட்மைப்புக்காக காணி வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
அதேபோல் மலையக இளைஞர்ää யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை தரும்படியும்ää சுகாதார பகுதியில் அபிவிருத்தி செய்ய வேண்டும். குறிப்பாக தோட்ட புறங்களில் வைத்தியசாலைகளை அமைத்து அரசாங்கம் ஏனைய சமூகத்தை மாற்றுவது போல மலையக சமூகத்தையும் மாற்ற வேண்டும் என இந்த ஊடகங்கள் மூலமாக ஜனாதிபதிக்கு தான் வேண்டுக்கோள் விடுவதாக பிரதி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.