GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு

எமது காத்தான்குடி பிரதேசத்தில்; சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக 'எல்லாம் அவனே' எனும் வழிகெட்ட அத்வைதக் கொள்கையை மௌலவி அப்துர் ரஊப் அவர்கள்; பிரச்சாரம் செய்தும்இ கட்டுக்கதைகளையும்இ கப்ஸாக்களையும் கூறி பாமர மக்கள் குழு ஒன்றை மதம் மாற்றியும் வைத்திருப்பது யாவரும் அறிந்ததே! 

அத்வைதம் என்பது இஸ்லாம் அல்ல. அது ஒரு இந்துமத சித்தார்ந்தம் என நாம் பல தடவைகள் பிரச்சாரம் செய்தும்இ முடிந்தால் எம்முடன் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் கலந்துரையாட அல்லது விவாதிக்க முன்வருமாறும் அழைப்புக்கள் விடுத்திருந்தோம். 

தௌஹீத் அமைப்புக்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்களாலும் விவாத அழைப்புக்களாலும் அத்வைதிகள் மத்தியில் ஏற்பட்ட கொள்கை சலசலப்பின் காரணமாகஇ எங்கே தமது தலைக்கு ஆபத்தாகிவிடுமோ எனப் பயந்துஇ அவைகளுக்கு முகங்கொடுக்க தெளிவும்;இ துணிவும் இல்லாத மௌலவி அப்துர் ரஊப் அவர்கள்இ தமது வழிகெட்ட கொள்கையை தூக்கி நிறுத்தவும்இ நலிவடைந்து வரும் அத்வைத கொள்கைக்கு முட்டுக் கொடுக்கவும் எதிர்வரும் 18இ 19 மற்றும் 20ம் திகதிகளில் 'ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாடு' என்ற பெயரில் தென்னிந்திய மார்க்க அறிஞர்கள்(?) என பலரை வரவழைத்து ஒரு உள்ளக ஒன்று கூடலை நடாத்தவுள்ளார்கள்.

'எல்லாம் கடவுள்' எனும் பித்தான கொள்கையால்; இஸ்லாத்தை விட்டும்இ ஒட்டுமொத்த முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்தும் வெளியேறிவிட்ட இத்தகையவர்கள்இ 'ஸுன்னத் வல் ஜமாஅத்' என்றஇ தங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத தலைப்பில் மாநாடு நடாத்தவிருப்பதுஇ தங்களது வழிகெட்ட மாற்றுமத அத்வைதக் கொள்கையை தந்திரமாய் மறைக்கும் கபடத்தனம் என்பதை நாம் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

மௌலவி அப்துர் ரஊப் அவர்களும் அவரைச் சார்ந்தோரும் தொடந்தும் அத்வைதக் கோட்பாட்டில்தான் உள்ளனர் என்பதையும்இ இவர்கள் தொடர்பில் ஏலவே வழங்கப்பட்ட பத்வாவை மீட்டும் வகையிலும் ஒலிஇ ஒளி ஆவணங்கள் மூலம் பல மாதங்களுக்கு முன்பாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாசபைஇ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதுஇ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை அத்வைதக் கோட்பாடு தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மௌலவி அப்துர் ரஊப் அவர்களை விளக்கமளிக்கக் கோரி அழைப்பு விடுத்திருந்தும்இ பதிலளிக்க முடியாமல் திராணியற்று பத்ரியாவுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.

இந்நிலையில் இம்மாநாடு தொடர்பில் காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமாசபை பகிஷ்கரிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇ சில அத்வைத ஆதரவாளர்களான உலமாக்களுக்கும்இ பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதே!

இம்மாநாடு முடிந்ததும் தமது சுய அரசியல் அற்ப சொற்ப இலாபங்களுக்காகஇ இம்மாநாட்டுக்கு உதவி ஒத்தாசை புரிந்த அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுஇ அவர்கள் தொடர்பில் பகிரங்கமாக பொதுமக்களுக்கு சரியான தெளிவை இன்ஷா அழ்ழாஹ் வழங்குவோம்.

இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வெளியூர்களில் உள்ள உலமாப் பெருமக்கள்இ பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாசபையின் பகிஷ்கரிப்பை முன்னுதாரணமாகக் கொண்டு இம்மாநாட்டை பகிஷ்கரிக்கும் படியும்இ இது தொடர்பில் தங்களது கண்டனத்தை வெளியிடும் படியும் கேட்டுக் கொள்கிறோம். 

மௌலவி அப்துர் ரஊப் அவர்களே! அத்வைதிகளே!

அறைகுறையாக கிதாபுகளையும் அந்நிய சித்தார்ந்தங்களையும் வாசித்துவிட்டு மக்களின் ஈமானோடு விளையாடாதீர்கள். மக்களை மடையர்களாக்கிய காலம் மலையேறிவிட்டது. கருத்தை கருத்தால் மோத பழகிக்கொள்ளுங்கள். சமூகத்தில் நீங்களெல்லாம் தூக்கியெறியப்படும் காலம் வெகுதூரமில்லை. முடியுமாயின் தங்களது மாநாட்டை பொது இடத்தில் நடாத்த முன்வாருங்கள். அடைக்கப்பட்ட பத்ரியாவுக்குள் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைவிட இது அழகானதும்இ அறிவுபூர்வமானதுமில்லையா?

அன்புப் பொதுமக்களே!

அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமான விடயங்கள் அரங்கேறும் இப்படியான நிகழ்வுகளில் அழ்ழாஹ்வின் சாபம் நிச்சயம் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

எனவேஇ அழ்ழாஹ்வுக்குப் பொருத்தமில்லாதஇ அவன் வெறுக்கக்கூடிய மார்க்க விரோத செயல்களிலிருந்து நம் அனைவரையும் அழ்ழாஹ் பாதுகாப்பானாக.

இவ்வண்ணம்
தாருல் அதர் அத்தஅவிய்யா
காத்தான்குடி.
17.10.2014

'எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை' (அல்குர்ஆன் 36:17)





 
Top