GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 எம்.சீ.எம்.லேனில் வசிக்கும் செய்னுலாப்தீன் முஹம்மட் சஜி நேற்று 17-10-2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் மட்டக்களப்பு நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டதாரியான இவர் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலம்,காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயம்,காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும்,ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காத்தான்குடி கிளை ஆகியவற்றின் உறுப்பினரும்,காத்தான்குடி சிட்டி ஒப்டிகள் ஸ்தானத்தின் உரிமையாளரும்,நியூஸ்பெஸ்ட்.நெட் இணையத்தளத்தின் செய்தியாளருமாவார்.

இவர் மர்ஹ_ம் முஹம்மட் செய்னுலாப்தீன் மற்றும் ஜனாபா  பாத்திமா ஜெஸீமா ஆகியோரின் புதல்வருமாவார்.



 
Top