(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 17.10.2014 கத்தார் பின் லஹ்தான் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஓன்றியத்தின் செயலாளர் மௌலவி முகைதீன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் 'நிருவாக மீள் கட்டமைப்பு எனும் தலைப்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் இடம்பெற்று பின்னர் பின்வரும் விதமாக நிர்வாகம் மீள கட்டமைக்கப்பட்டது.
ஓன்றியத் தலைவராக மௌலவி எம்.எம்.எம்.உவைஸ் (பலாஹி)இஉப தலைவராக மௌலவி எம்.ஐ.எம்.சுஜாஹ்(பலாஹி)இபிரதித் தலைவராக மௌலவி எம்.ஏ.எம்.புர்ஹான் (பலாஹி)இபொதுச் செயலாளராக மௌலவி எம்.பி.எம். அஸ்பர்(பலாஹி)இஉப செயலாளராக மௌலவி எஸ்.ஏ.எம்.சிஹான்(பலாஹி)இபொருளாளராக மௌலவி கே.எல்.எம்.இமாமுத்தீன்(பலாஹி)இஉதவிப்பொருளாளராக மௌலவி எம்.எம்.சிஹாபுத்தீன் (பலாஹி)இகணக்காய்வாளராக மௌலவி ஈ.எல்.எம்.நியாஸ்(பலாஹி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த 2013.11.01முதல் ஓர் அமைப்பாக இயங்கி வரும் குறித்த ஒன்றியம் எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.