GuidePedia

(க.கிஷாந்தன்)
தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாகியிருப்பதால் தமிழர் அரசியலில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் கடந்த ஒரு வருடகாலமாக இணைந்தே செயற்படுவதாகவும், அவர்கள் இதுவரை எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியியிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி 03.06.2015 அன்று புதன்கிழமை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய கூட்டணி உருவாக்கம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாட்டினை அறியும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கத்துடன் நாம் தொடர்பினை ஏற்படுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 75 வருடங்களாக மக்களுக்கு சேவையாற்றி வரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் நன்மதிப்பை வென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




 
Top