GuidePedia

வில்பத்து விவகாரத்தை வைத்து அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் எதிர்வரும் சனிக்கிழமை தபாலகத் தலைமையக கேட்போர் கூடத்தில் செயலமர்வை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது. 

ரிஷாட் பதியுதீனின் அரசியல் பிழைப்புக்காக வில்பத்து விவகாரத்தை ஊதி பெருப்பித்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மீடியா போரம் அதற்கு முட்டுக்கொடுக்க முற்படுவதையிட்டு அவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பலர்  எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருக்கும் 'வில்பத்து - உண்மை நிலையும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்' எனும் தலைப்பில் இடம்பெறும் இச்செயலமர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அலுவலக தலைப்பிடப்பட்ட கடிதத்திலேயே சென்றடைந்துள்ளன.
ஜனநாயகத்தை பிரதிபளிக்கும் நான்காவது சக்தி ஊடகமாகும். இந்நிலையில் இலங்கையில் ஊடகப்பணியில் ஈடுபடும் முஸ்லிம்களை பிரதிபளிக்கும் முக்கிய ஊடக அமைப்பு முஸ்லிம் மீடியா போரமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒரு அரசியல்வாதியின் நிகழ்ச்சிநிரலுக்கமைய இவ்வமைப்பு செயற்படுவதானது ஏதோ ஒருவகையில் ஒருசாராருக்கு சோரம்போகின்றமையால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

முஸ்லிம் மீடியா போரமானது தன்னிச்சையாக இயங்கவேண்டுமென்பதும் அவ்வமைப்பு எந்த அரசியல்வாதிகளினது நிகழ்ச்சி நிரலுக்கமைவாக செயற்பட கூடாதென்பதுமே எதிர்ப்பை வெளியிட்டோரின் கோரிக்கையாக இருக்கின்றது. 

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களே, செயலாளர் றிப்தி அலி அவர்களே இன்னும் இவ்வமைப்பை அலங்கரித்துக்கொண்டிருக்கும் முக்கியஸ்தர்களே ஏன் இந்த அவல நிலை. நாட்டின் நிலைமைகளை புரிந்து செயற்படுவது காலத்தின் தேவை அல்லவா?

முஸ்லிம் மீடியா போரம் 
அங்கத்தவன்
பௌஸான் லாஹிர்



 
Top