முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வார்களோ என அஞ்சுவதாக அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உழைக்கம் வர்க்கத்தில் தலைவர்கள் உருவாகவில்லை. தற்போதைக்கு அவ்வாறு உருவான தலைவர்களில் ஒருவர் பிரேமதாசவேயாகும். அவரைக் கொலை செய்து விட்டார்கள்.
எமது கட்சியில் உருவான தலைவர்கள் செல்வந்தர்கள், பெரும் பணக்காரர்கள். எனினும் இன்று எமது கட்சியிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒர் தலைவர் உருவாகியுள்ளார்.
நான் கால்களை நேராக வைத்துக் கொண்டு மஹிந்த, சந்திரிக்கா மற்றம் சிறிமாவோ ஆகியோருக்கு கடமைகளை செய்திருக்கின்றேன்.
தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கும் கடமைகளை செய்வேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயமுனி டி சில்வா, மொனராகலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.