GuidePedia

புத்தளம் பகுதி ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் பட்டானி ராசிக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


33வயதை சேர்ந்த சந்தேக நபர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


2010ஆம் ஆண்டு பட்டானி ராசிக் பொலன்னறுவையில் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டு, பின்னர் சந்தேக நபர் 2 கோடி கப்பம் கேட்டு கொடுக்காமையினால் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.



 
Top