GuidePedia

(காதர் முனவ்வர்)
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்ப்படுவதற்கான இலங்கையின் புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் கவனத்திற்கொண்டுள்ளப்பட்டுள்ளதுடன் சிறந்த தீர்வொன்றை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளது.   இது தொடர்பான கலந்துறையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின்  உயர்மட்டக்குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.    

இலங்கைகான  ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதி டாவிட்டலய்    நேற்று (18)  கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வளாகத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக   அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே இதனை  வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ பதவி வகித்த காலப்பகுதியில் மனித உரிமை பதிவுகளில் காணப்பட்ட அதிருப்தி காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையினை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியது. இந்ந நிலையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தினரின் எதிர்பார்ப்புக்களை மேற்கொண்டிருக்கும் நிலையில்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளாய்வுகளினை ஆரம்பித்துள்ளது.

இச் சந்திப்பில் டாவிட்டலய்   மேலும் தெரிவித்தாவது: இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கடந்த காலத்தில் தடை செய்யப்பட்;;டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதிகளில் இருந்து மீளாய்வு நடவடிக்ககைகளில் மிகத்தீவிரமாக செயற்படுவார்கள்.   வர்த்தக வரலாற்றில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் தடைகளை தாண்டி முதல் முறையாக் 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறுத்தம் காரணமாக இலங்கைக்கு  அதிகளவான வருமானம் இழப்பு ஆடைதுறையில் ஏற்பட்டிருந்ததாக   கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலம் அறிந்துள்ளளோம் என்றார். 

அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்து தெரிவிக்கையில்: முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை இடையிலான வர்த்தக  5; பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது என்று   நீங்கள் அறிவித்தமை எமக்கு  உற்;சாகத்ததை தருகின்றது.   கடந்த அரசாங்கத்தில் இழக்கப்பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின்  எடுக்கபட்ட முயற்சிகள் சாதக நிலைப்பாட்டினை காட்டுகிறது.   வரிச் சலுகை இழக்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் பல நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்தன.  2013 ஆம் ஆண்டில்; ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது வர்த்தக  5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நெருக்கமாக இருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைள் நடைமுறையில் இருந்தால் இவ்வர்த்தகம்  மிகவும் நன்மையாக இருந்திருக்கும்.  2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ்  சலுகையை நிறுத்தியது. எனினும் இச்சலுகைகள் நிறுத்தப்பட்ட போதிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வசதி தொடர்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையினுடைய ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை  (குறிப்பாக ஆடை ஏற்றுமதிக்கு) இலவசமாக வழங்கியது. தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இலங்கையின்  தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம்  மிக உயர்ந்த வருமானமாக 2014 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதோடு இலங்கைக்கான முக்கியமான ஐரோப்பிய ஜீ.எஸ்.பி. பிளஸ் மீட்பு வசதி வாய்ப்புக்கள் சாதகமான சமிஞையை வெளிப்படுத்துகின்றது.  நாம் இப்பொழுது எமது ஆடை ஏற்றுமதிக்கான  5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி நகர தயாராக இருக்கிறோம். 2014 ஆம் ஆண்டு நமது நாட்டின் ஆடைகள் ஏற்றுமதிக்கான ஒட்டுமொத்த வருமானம் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டது என்றார் அமைச்சர் ரிஷாட். 

இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துலஎகெடகே, இலங்கை வர்த்தக திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். 



 
Top