GuidePedia

இலங்கைப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடுத்தடுத்து  இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பிரதமர் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்போது ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை செப்டம்பர் 15ஆம் திகதியன்று சந்திக்கவுள்ளார்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்தத்தை மேம்படுத்தும் வலையமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசாங்கம் பல முனைகளில் இலங்கை மீதுள்ள வெளிநாட்டு அழுத்தங்களை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.



 
Top