GuidePedia

(எப்.முபாரக்)                      
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இறுதிப்போரின் போது இடம் பெயர்ந்த சம்பூர் கரைவலை மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை(4) பத்து வருடங்களின் பின்னர் தமது தொழிலை சம்பூர் கடற்கரையில் ஆரம்பித்தனர்.                                   தாம் மீள்குடியேற்றப்படுவதையே இந்த வருட ஆரம்பத்தில் நம்பியிருக்காத மீனவர்கள் இந்த நிலை ஏற்படுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.சம்பூர் பிரதேசம் பலவகையிலும் கடற்கரைக் குடாப் பகுதியாக இருந்தமையினால் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் தமது ஜீவனோபாயமாக மீன்பிடியை கொண்டிருந்த போதும் கடந்த பத்து வருடங்களாக பாரிய கஷ்டங்களுடன் வாழ்ந்ததாக தெரிவித்தனர்.                                  
இந்நிலையில் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டநிலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 237 ஏக்கர் காணியும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.இதனையடுத்து மீனவர்களில் ஒரு பிரிவினராக கரைவலைத் தொழிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (4) அனுமதியை படையினர் வழங்கியிருந்தனர். 



 
Top