ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று காலை 9.00 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.
