GuidePedia

வடக்கு கிழக்கு சுனாமி நிவாரண நிதியில் 127 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ராதா நிறுவன முன்னாள் நிறைவேற்று அதிகாரி சாலிய விக்ரமசூரியவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் மகன்- மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்தது. இதனை அடுத்து கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நௌசர் பௌசி இன்றே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 



 
Top