நேபாளத்தில் 7.4 ரிக்டர் அளவில் மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட இந்த நில நடுக்கமானது இந்திய தலைநகர் புதுடெல்லி உட்பட வட இந்திய நகரங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தில், சுமார் 7000இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இதன் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்தவண்ணமுள்ள நிலையில், இன்றைய தினம் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
